மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜே.வடிவேல் என்பவர் தற்போது ‘கள்ளப்படம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாறியிருக்கிறார். இந்தப்படத்தை இறைவன் ஃபிலிம்ஸ் சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் என்பவர் தயாரிக்கிறார். சந்தோஷ் சிவனிடம் உதவியாளராக இருந்த ஸ்ரீராம சந்தோஷ் என்பவர் ஒளிப்பதிவு செய்ய, ‘யுத்தம் செய்’ படத்திற்கு இசையமைத்த ‘கே’ இசையமைக்கிறார்.
கடந்த நவம்பர் 21ஆம் தேதி துவங்கிய இந்தப்படத்தின் துவக்கவிழாவில் தங்களுடைய சீடர்களை ஆசிர்வதிக்கும் விதமாக மிஸ்கினும் சந்தோஷ் சிவனும் கலந்துகொண்டனர். படத்தின் மூன்று காட்சிகளை இயக்கி படத்தை துவக்கி வைத்தார் மிஸ்கின்.