ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கு தந்தையாக நடிக்கிறார் இயக்குனர் ‘ஜெயம்’ ராஜா

105

சாதாரணமாக வீட்டில் ஒரு குழந்தை வைத்திருக்கிறவர்களே அந்த குழந்தையை வளர்ப்பதற்கு போராடுவார்கள்… அதே குடும்பத்தில் இரட்டை குழந்தைகளோ, இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளோ இருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும், அவர்கள் தினமும் சந்திக்கிற நிகழ்வுகள் என்ன என்பதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் தான் ‘என்ன சத்தம் இந்த நேரம்’.

பல வெற்றிப்படங்களை இயக்கி இயக்குனராக மட்டும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் ‘ஜெயம்’ராஜா இந்த படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். முழுக்க முழுக்க காமெடி த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப்படத்தை குரு ரமேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.

ஒரே நாளில் காலையில் தொடங்கி மாலையில் முடிகிற சம்பவங்கள்தான் இந்தப்படத்தின் கதை. படத்தின் சிறப்பம்சமே ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண் குழந்தைகள் நடித்திருப்பதுதான். இந்த குழந்தைகளின் அப்பாவாகத்தான் இயக்குனர் ஜெயம்ராஜா நடித்திருக்கிறார்.

உலக சினிமா வரலாற்றில் இதுபோன்று ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண் குழந்தைகள் ஒரு படத்தில் இணைந்து நடித்ததில்லை. இந்த பெருமையை பெற்றிருப்பதோடு, லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது. இந்தப்படத்தில் நிதின்சத்யா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். மாளவிகா வேல்ஸ் என்பவர் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார்.

Leave A Reply

Your email address will not be published.