லிங்குசாமியின் டைரக்ஷனில் சூர்யா நடித்துவரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. படத்தில் சூர்யாவுக்கு இரண்டு விதமான கெட்டப். அதனால் அழகாக தாடி வளர்த்து ‘நந்தா’ படத்தில் இருந்ததைப்போல ஆளே மாறியிருக்கிறார் சூர்யா. இந்தப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா.
தற்போது சமந்தாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பில் இருந்து சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு, அதற்கான சிகிச்சையும் பெற்று வருகிறார். இன்னும் இரண்டு மூன்று தினங்களுக்குள் அவருக்கு குணமாகிவிடும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளதால் வரும் ஏழாம் தேதியில் இருந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார் சமந்தா.