ஆரம்பம் தந்த வெற்றியோடு அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறார் விஷ்ணுவர்தன். இந்தப்படத்தில் ஹீரோ அவரது ஃபேவரைட் ஆர்யா தான். ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘சர்வம்’, ‘ஆரம்பம்’ படங்களைத் தொடர்ந்து விஷ்ணுவர்தனும் ஆர்யாவும் இணையும் ஐந்தாவது படம் இது.
இந்த நேரத்தில் பல ரசிகர்களின் மனதில் ஒரு கேள்வி ஓடிக்கொண்டு இருக்கும்.. ஸ்டார் நடிகர்களை வைத்து படம் இயக்கும் விஷ்ணுவர்தன் தனது தம்பியான ‘அலிபாபா’ கிருஷ்ணாவை வைத்து இவ்வளவு நாளாக ஒரு படம் இயக்காதது ஏன் என்று..? இப்போது அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தப்படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து கிருஷ்ணாவும் நடிக்கிறார்.