மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜே.வடிவேல் என்பவர் தற்போது‘கள்ளப்படம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். கடந்த நவம்பர் 21ஆம் தேதி துவங்கிய இந்தப்படத்தின் துவக்கவிழாவில் கலந்துகொண்டு. படத்தின் மூன்று காட்சிகளை இயக்கி படத்தை துவக்கி வைத்தார் மிஸ்கின்..
சினிமா பின்னணியை மையமாக வைத்து கதை பின்னப்பட்டிருக்கும் இந்தப்படத்துக்கு ‘யுத்தம் செய்’ படத்திற்கு இசையமைத்த ‘கே’ இசையமைக்கிறார். இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வெள்ளக்கார ராணி’ என்ற பாடல் ஒன்று ‘’கன்னித்தீவு பெண்ணா’ சாயலில் இருக்கிறது. அதை ஒப்புக்கொண்ட இசையமைப்ப்பாளர் கே, தெரிந்தேதான் அந்த ட்யூனை பயன்படுத்தினோம் என கூறுகிறார்.
இந்த பாடலை எழுதியுள்ளதோடு அதை பாடியும் இருக்கிறார் மிஸ்கின். இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட மிஷ்கின், இனி வரும் காலங்களில் தான் இயக்கும் படங்களில், பாடல்களே இல்லாமல் படம் எடுக்கும் முடிவுக்கு வந்துவிட்டதால், அவருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக அவரை வைத்தே இந்த பாடலை உருவாக்கியுள்ளாராம் இயக்குனர் வடிவேல்.
Comments are closed.