விதார்த் படத்துக்கு ‘U’ சர்ட்டிஃபிகேட்..!

89

ராஜ்குமார் குப்தா டைரக்‌ஷன்ல 2008-ல வெளிவந்து வெற்றிபெற்ற ஹிந்திப்படம் தான் ‘ஆமீர்’. இந்தப்படம்தான் இப்போ தமிழ்ல விதார்த் ஹீரோவா நடிக்க ‘ஆள்’ என்கிற பெயர்ல உருவாகியிருக்கு. விதார்த்துக்கு ஜோடியா ஹார்த்திகா அப்படிங்கிற புதுமுகம் ஹீரோயினா அறிமுகமாகிறார்.

இதுவரைக்கும் தமிழ்சினிமாவுல கிராமத்துல தெனாவெட்டா கோயில்காளை மாதிரி சுத்திட்டிருந்த விதார்த்துக்கு இந்தப்படத்துல காலேஜ் புரஃபஷரா கோட் ஷூட் மாட்டி விட்ருக்காங்க. சமீபத்துல இந்தப்படத்தை பார்த்த சென்சார் போர்டு பட்த்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

‘வீரம்’ படப்பிடிப்பில் இருந்தபோது தான் நடித்த ‘ஆள்’ படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு, இந்தப் படம் கண்டிப்பா ஹிட்டாகும் என்று அஜித் பாராட்டியிருப்பதால் இந்தப்படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார் விதார்த்.

Leave A Reply

Your email address will not be published.