பிரபல நடிகர்கள் இப்போது தங்களது படங்களில் பாடுகிறார்களோ இல்லையோ தங்களது நண்பர்கள் நடிக்கும் படங்களில் ஜஸ்ட் லைக் தட் ஒரு பாடலை பாடிக்கொடுத்துவிட்டுப் போகிற வழக்கம் தமிழ்சினிமாவில் ஒரு ட்ரெண்டாகவே மாறிவிட்டது.
கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘என்னமோ’ ஏதோ படத்திற்காக டி.இமான் இசையில் ஷட்டப் யுவர் மவுத் என்ற மிடில் ஈஸ்டர்ன் எனப்படும் அரேபியன் ஸ்டைலில் அமைந்த பாடலை பாடியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்தப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தும் ஒரு பாடலை பாடியுள்ளார். மேலும் கேரளத்து பாடகியான வைக்கம் விஜயலட்சுமியை அழைத்து வந்தும் ஒரு பாடலை பாட வைத்திருக்கிறார் இமான்.
‘கும்கி’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘பாண்டியநாடு’, லேட்டஸ்டாக வெளியான ‘ஜில்லா’ என இமான் இசையமைக்கும் பாடல்கள் தொடர்ந்து ஹிட்டாகி வருவதுபோல் இந்தப்படத்தின் பாடல்களும் இப்போது சூப்பர்ஹிட்டானதில் படக்குழுவினருக்கு ரொமபவே மகிழ்ச்சி.
ரவிபிரசாத் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படம் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற அல மொதலைந்தி என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்தப்படத்தை ரவி தியாகராஜன் டைரக்ட் செய்து வருகிறார். கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக ராகுல் பிரீத்சிங், நிகிஷா படேல் நடித்திருக்கிறார்கள். மார்ச்-28ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.