ஆள் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறார். ஆனால் இன்னும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான் படம் ஒன்றும் அமையவில்லையே என்ற மனக்குறை இருந்துகொண்டுதான் இருக்கிறது. நடிகர் ரிச்சர்டைத்தான் சொல்கிறோம். ஆனால் தற்போது தயாராகிவரும் ‘ரெண்டாவது படம்’ அவருக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும் என்று உறுதியாக நம்புகிறார் ரிச்சர்டு. காரணம் படத்தின் இயக்குனர் சி.எஸ்.அமுதன் அந்த அளவுக்கு வேலை வாங்கியிருக்கிறாராம்.
“என்னைப்பொறுத்த வரை அனைத்து படங்களுக்கும் கடினமான உழைப்பைத்தான் கொடுத்து வருகிறேன். மற்றபடி வெற்றி என்பதை கடவுள்தான் தீர்மானிக்க வேண்டும்” என்று தத்துவம் பேசுகிற ரிச்சர்டு ‘ஆண்டி’, ‘நேற்று இன்று’ மற்றும் ‘ஜடாயு’ ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
Здравствуйте!Ищу мастера по созданию web сайта. узнать подробности