தீபாவளிக்கு ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா, பாண்டியநாடு என மூன்று படங்கள் மட்டும்தான் ரிலீஸாகின்றன என்று தெரிந்த விஷயத்தையே திருப்பி திருப்பிச் சொல்வதாக நினைக்க வேண்டாம். தினசரி புதுசு புதுசாக விஷயங்கள் இந்தப்படங்களைப் பற்றி வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன.
என்னதான் அஜீத் மாஸ் ஸ்டாராக இருந்தாலும் ஆரம்பம் படம் ஓடக்கூடிய நேரம் இரண்டரை மணி நேரம் தான். ஆனால் ஆல் இன் ஆல் அழகுராஜா படமோ மூன்று மணி நேரம் ஓடுமாம். படம் ஓடும் நேரம் குறைவு என்றாலும் அஜீத்தின் அதிரடி அதிகமாகத்தான் இருக்கும்.
இந்தப்பக்கம் கார்த்தி, சந்தானம் கூட்டணியின் சலம்பலே எவ்வளவு நேரமானாலும் ரசிகர்களை தியேட்டரில் அலுப்பு தெரியாமல் உட்கார வைத்து விடுமே..!அதேபோல பாண்டியநாடு படமும் விஷாலுக்கு இன்னொரு ‘சண்டைக்கோழி’யாக இருக்கும் என்கிறார்கள் படத்தில் வேலைபார்த்துள்ள தொழிநுட்ப பிரிவினர். அப்ப இந்த தீபாவளி… (நீங்களே ஏதாவது போட்டுக்குங்க பாஸ்)