மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான ‘22 ஃபீமேல் கோட்டயம்’ படம் தான் தற்போது ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. நடிகை ஸ்ரீப்ரியா இந்தப்படத்தை இயக்கி வருகிறார். மலையாளத்தில் ரீமா கல்லிங்கல் நடித்த வேடத்தில் தமிழில் நடித்திருக்கிறார் நித்யாமேனன். தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் ‘தயாராகியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தவும் திட்டமிட்டுள்ளார் ஸ்ரீபிரியா. இந்த விழாவில் கலந்துகொள்ள ரஜினியும் கமலும் தாங்களே முன்வந்து விருப்பம் தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 1970 மற்றும் 80களில் ரஜினி, கமல் இருவருடனும் அதிக படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீபிரியா. அந்த நட்பின் அடிப்படையில் இருவரும் விழாவுக்கு வர விருப்பம் தெரிவித்திருக்கிறார்களாம்.
Prev Post