தனுஷ் படத்துக்கு பாடல் எழுதிய சி.எஸ்.அமுதன்..!

226

ஒட்டு மொத்த தமிழ் சினிமாவை கலாய்த்து ‘தமிழ் படம்’ என்ற படத்தை இயக்கின சி.எஸ்.அமுதன் இப்போ எடுத்துட்டு வர்ற இரண்டாவது படத்தின் பெயரே ’ரெண்டாவது படம்’தான். இந்தப்படத்துக்கான வேலைகள் ஒருபக்கம் நடந்துக்கிட்டு இருக்க, இப்ப திடீர்னு பாடலாசிரியர் அவதாரம் எடுத்திருக்காரு சி.எஸ்.அமுதன்.

கே.வி.ஆனந்த் டைரக்ஷன்ல தனுஷ் நடித்துவரும் ‘அநேகன்’ படத்துல ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்ல ஒரு பாட்டு எழுதியிருக்கிறார் அமுதன். ஏற்கனவே கே.வி.ஆனந்த் விளம்பர படங்களில் பணியாற்றியபோது அமுதனின் பாடல் எழுதும் திறமையை கவனித்து வந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து தான் இந்த வாய்ப்பை அமுதனுக்கு கொடுத்திருகிறார்.

அமுதன் எழுதிய பாடலை பற்றி இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறுகையில், “என் படத்தில் மென்பொருள் ஊழியர்கள், வார விடுமுறையை உற்சாகமாக கொண்டாட நினைப்பதுபோல ஒரு காட்சி.. அவர்களின் மனநிலை அறிந்து பாடலை எழுதும் பாடலசிரியர் வேண்டும் என்று நினைத்தேன். அப்போது அமுதன் ஞாபகம் வரவே அவரையே தேர்வு செய்தேன்’ என்கிறார்.

Comments are closed.