இயக்குனர் லிங்குசாமியின் படங்களுக்கு தமிழில் மட்டுமல்ல, இந்தியிலும் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நல்ல வரவேற்பு உண்டு. குறிப்பாக ஆந்திர இளம் முன்னணி நடிகர்கள் இவரது டைரக்ஷனில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என விரும்புகிறார்கள்.
இப்போது லிங்குசாமிக்கு தெலுங்கில் படம் இயக்கும் காலம் கனிந்து வந்திருக்கிறது. சூப்பர்குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி.
லிங்குசாமி தற்போது சூர்யாவை வைத்து இயக்கிவரும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டார். இந்தப்படத்தை முடித்துவிட்டு அடுத்து மகேஷ்பாபு படத்தின் வேலைகளை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு பக்கம் ‘ஜில்லா’ படத்திற்கு கிடைக்கும் வரவேற்பையும் வெற்றியையும் பொறுத்து அதை தெலுங்கில் ரீமேக் செய்யவும் முடிவு செய்துள்ளார் ஆர்.பி.சௌத்ரி. ஆனால் முதலில் தயாரிக்க இருப்பது ‘ஜில்லா’ ரீமேக்கா அல்லது மகேஷ்பாபு நடிக்க லிங்குசாமி இயக்கும் படமா என்பது போகப்போகத் தான் தெரியும்.
இனி தான் தயாரிக்கும் படங்கள் அனைத்திலும் ஜீவா, ஜித்தன் ரமேஷ் உட்பட தனது வாரிசுகள் நான்கு பேரையும் பங்குதாரார்களாக இடம்பெறச் செய்ய முடிவு செய்திருக்கிறார் ஆர்.பி.சௌத்ரி.