ஜில்லா படத்தை பொங்கலுக்கு வெளியிடும் சந்தோஷத்தில் இருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி. இந்தப்படத்தின் கதைக்களம் மதுரையை சுற்றித்தான் அமைந்திருக்கிறது. இந்தப்படத்தில் மோகன்லாலின் வளர்ப்பு மகனாக விஜய் நடித்திருக்கிறார் என்பது லேட்டஸ்ட் தகவல்.
சூப்பர்குட் ஃப்லிம்ஸ் தயாரிக்கும் 85வது படம். தங்களது தயாரிப்பில் விஜய் நடிக்கும் 6வது படம், மோகன்லால் நேரடியாக நடிக்கும் 4வது தமிழ்ப்படம் என பல பெருமைகள் ‘ஜில்லா’வுக்கு சேர்ந்திருப்பதில் ஆர்.பி.சௌத்ரிக்கு கூடுதல் மகிழ்ச்சி.
ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ள படங்களிலேயே ‘ஜில்லா’வுக்குத்தான் பட்ஜெட் அதிகம். இதற்கு முன் தெலுங்கில் ‘ரச்சா’ படத்தைத்தான் அதிக பொருட்செலவில் தயாரித்திருந்தார் ஆர்.பி.சௌத்ரி. ‘ஜில்லா’ மொத்தம் 1000 திரையரங்குகளில் (மல்டிஃப்ளெக்ஸ் தியேட்டர்களையும் சேர்த்து) திரையிடப்படுகின்றன. இதில் கேரளாவில் மட்டும் 300 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.
இந்தப்படத்தில் தனது சம்பளத்திற்கு பதிலாக ‘ஜில்லா’வின் கேரள வினியோக உரிமையை மோகன்லால் வாங்கியிருப்பதிலிருந்தே படத்தின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளதை நாம் கணித்து விடலாம்.