‘கோலாகலம்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் – வரிவிலக்கும் கிடைத்தது

57

பி.ஜி.எஸ் பிலிம் இன்டர்நேஷனல் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக பி.ஜி.சுரேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் தான் ‘கோலாகலம்’. பார்வை ஒன்றே போதுமே, சுந்தரா ட்ராவல்ஸ் படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களைத் தந்த பரணி ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சரண்யா மோகன், இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, ஹீரோவாக புதுமுகம் அமல் என்பவர் நடிக்கிறார். மேலும் கஞ்சா கருப்பு, தேவதர்ஷினி, மீரா கிருஷ்ணன், வியட்நாம் வீடு சுந்தரம், மனோபாலா மற்றும் பலரும் இந்தப்படத்தில் நடிக்கிறார்கள்.

படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ஒரு கட் கூட இல்லாமல் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அத்துடன் வரிவிலக்குக்காகப் பார்த்த குழுவினரும் பாராட்டு தெரிவித்ததுடன் வரிவிலக்கும் அளித்திருக்கின்றனர். இந்தப்படத்தின் ட்ரெய்லர் இன்று முதல் 234 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.