காதலில் விழுந்தேன், எப்படி மனசுக்குள் வந்தாய் போன்ற படங்களை இயக்கியவர் பி.வி.பிரசாத். இவர் தற்போது கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் “சகுந்தலாவின் காதலன்”. இந்தப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார் கருணாஸ்.
எடிட்டர் வி.டி.விஜயன் இந்தப்படத்திற்கு எடிட்டிங் செய்கிறார். படம் பார்த்தபோது கருணாஸின் நகைச்சுவை காட்சிகள் வரும் பல இடங்களில் அடக்கமுடியாமல் சிரித்துவிட்டாராம். மேலும் கருணாஸின் காமெடி சூப்பர் என்றும் பாராட்டினாராம்.