‘உன்னாலே..உன்னாலே’, ‘ஜெயம்கொண்டான்’ என சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் நல்ல நடிகை என பெயர் வாங்கியவர் லேகா வாஷிங்டன். பிரசன்னாவுடன் ஜோடியாக இவர் நடித்துள்ள ‘கல்யாண சமையல் சாதம்’ படம் டிசம்பர்-6ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
இதைத்தொடர்ந்து ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ் சிவன் டைரக்ஷனில் அவரது அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் லேகா. சந்தோஷ் சிவன் கலைநுணுக்கத்துடன் தயாரிக்கப்படும் பொருட்களில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். லேகாவும் அடிப்படையில் ஒரு டிசைனர்தான். சொந்தமாக ஒரு நிறுவனம் நடத்திவரும் லேகாவின் கலைத்திறமையை பார்த்து ஆச்சர்யமடைந்த சந்தோஷ் சிவன் அதில் ஈர்க்கப்பட்டு தான், அவரை தனது படத்திற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறாராம்.