தமிழ்சினிமாவில் தன்னம்பிக்கைக்கு ஒரு உதராணமாக நடிகர் ராமராஜனை சொல்லலாம். ‘கரகாட்டக்காரன்’ படம் ஒன்றுபோதும், காலகாலத்திற்கு இவரது புகழை பறைசாற்ற.. கடந்தவருடம் ராமராஜன் நடித்த ‘மேதை’ படம் வெளியானது. அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ‘கும்பாபிஷேகம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ராமராஜன். கதாநாயகியாக நூர்யா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப்படத்தின் கதையை எழுதி இயக்குகிறார் கே.எம்.புஷ்பராஜ். 1990களில் தனது இசையால் தமிழ்சினிமாவிற்கு சூப்பர்ஹிட் பாடல்களைத் தந்த சௌந்தர்யன் தான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.
முற்றிலும் மாறுபட்ட கிராமத்து கதையம்சத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப்படத்தின். படப்பிடிப்பு டிசம்பர்-9 ஆம் தேதி துவங்கி கிருஷ்ணகிரி, காவேரிபட்டினம் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.