இமான் இசையில் தமிழில் பாடினார் வைக்கம் விஜயலட்சுமி

89

சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான ‘செல்லுலாய்ட்’ படத்தில் ‘காற்றே காற்றே’ என்று தனது காந்தக் குரலால் நம் மனதை ஆட்கொண்டவர் வைக்கம் விஜயலட்சுமி. கண்பார்வை அற்றவரான இவர் காயத்ரி வீணை மீட்டுவதிலும் வல்லவர்.

சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என நிரூபித்திருக்கும் 31 வயது விஜயலட்சுமி, குரலோடு குணத்தாலும் ரசிகர்கள் அனைவரையும் வசீகரித்திருக்கிறார். மலையாள நாட்டின் பொக்கிஷம் என்றுதான் கேரள ரசிகர்கள் இவரை அழைக்கிறார்கள்.

தற்போது தமிழில் ரவி பிரசாத் புரொடக்சன்ஸ் தயாரித்து வரும் “என்னமோ ஏதோ” படத்திற்காக டி.இமான் இசையில் மதன் கார்க்கி எழுதிய பாடல் ஒன்றை பாடியுள்ளார் வைக்கம் விஜயலட்சுமி. கொச்சின் பாலரிவட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஃபிரடி என்ற ஸ்டுடியோவில் இந்தப்பாடல் பதிவு ஆனது.

பி.ரவிகுமார், பி.வி.பிரசாத் தயாரிக்கும் இந்தப்படத்தை ரவி தியாகராஜன் டைரக்ட் செய்து வருகிறார். கதாநாயகனாக கவுதம் கார்த்திக், அவரது ஜோடியாக ராகுல் பிரீத்சிங், நிகிஷா படேல் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.