இளையராஜா இசையில் முழுப்பாடல் பாடினார் வேல்முருகன்

48

ஆடுகளம், நாடோடிகள் படத்தில் சூப்பர்ஹிட் பாடல்களை பாடிய வேல்முருகன் தற்போது இசைஞானி இளையராஜா இசையில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ‘ஒரு ஊர்ல’ என்ற படத்துக்காக வேல்முருகன் பாடிய “இப்படியும் ஒருத்தன் உண்டு. அத எப்படி நான் சொல்லுவது? என்ற இந்தப்பாடல் பரபரப்பாக பேசப்படும் என்கிறார் இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் கே.எஸ்.வசந்தகுமார்.

“இளையராஜா இசையில் ஐந்து பேரில் ஒருவன், மூவரில் ஒருவன் என ஒன்றிரண்டு படங்களில் பாடி இருக்கிறேன். ஆனால் இந்தப்படத்தில் தான் முழுப்பாடலையும் பாடி இருக்கிறேன். இசைஞானியின் ஆசியால் நிச்சயம் இந்தப்பாடல் எனக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை வழங்கும்” என்கிறார் வேல்முருகன்.

உதிரிப்பூக்கள், என் ராசாவின் மனசிலே, சேது படங்களைப்போல இளையராஜா முழு படத்தையும் பார்த்துவிட்டுத்தான் இந்தப்படத்திற்கு இசையமைத்து கொடுத்திருக்கிறாராம். இந்தப்படத்தில் பருத்திவீரன் வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பருத்திவீரன் படத்தில் பிரியாமணியின் முறை மாமன் வேடத்தில் நடித்தவர். கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நேகா பட்டீல் கதாநாயகியாக நடிக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.