படத்தைப்போலவே நிஜத்திலும்…’முத்துநகரம்’ பட சுவராஸ்யம்

48

தற்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் “முத்துநகரம்” படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியைப்போல படம் வெளியான அன்றும் சுவராஸ்யமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. உல்லாசப் பறவைகளாய் சுற்றித்திரிந்த நண்பர்கள் ஐந்து பேரை பொய்வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது போலீஸ். தண்டனை முடிந்து வெளியே வந்த ஐவரும் அதே போலீஸ் நிலையத்திற்கு போகின்றனர். அந்த போலீஸ் நிலையத்தில் உள்ள துப்பாக்கி ஒன்றை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து குற்றச்செயல்களில் ஈடுபடுகிறனர். பொய்வழக்குப் போட்ட இன்ஸ்பெக்டர் மீது விசாரனை நடக்கிறது. இது தான் முத்து நகரம் படத்தின் கதை.

படம் வெளியான அதே நாளன்று புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி என்ற ஊரில் உள்ள போலீஸ் நிலையத்தில் துப்பாக்கி ஒன்று களவு போயிருக்கிறதாம். படத்திற்கு எப்படியெல்லாம் விளம்பரம் கிடைக்கிறது பாருங்கள்.

Leave A Reply

Your email address will not be published.