விக்னேஷ் புரடக்ஷன் சார்பில் ‘ஒரு ஊர்ல’ என்ற படத்தை இயக்கிவருகிறார் கே.எஸ்.வசந்தகுமார். படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று அவரிடம் கதை சொல்லியிருக்கிறார். கதையை கேட்ட ராஜா ”முழு படத்தையும் எடுத்து முடித்து கொண்டுவாருங்கள் பார்க்கலாம்.” என்றிருகிறார். படத்தை பார்த்த ராஜா இயக்குனரை இயக்குனரை பாராட்டி தள்ளிவிட்டார். சொன்னபடியே அசத்தலாக பின்னனி இசையமைத்து தந்திருக்கிறார்.
இந்த படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிக்காக ஒரு பொட்டல் காடு லொகேசன் தேவைப்பட்டிருக்கிறது. அப்படி இடமும் கிடைத்திருக்கிறது. பதினெட்டு நாட்கள் அந்த சண்டை காட்சியை எடுத்திருக்கிறார் இயக்குனர் வசந்தகுமார். சரி இதில் பிரியாமணி எங்கு வந்தார் என்று கேட்கிறீர்களா இந்த படத்தின் ஹீரோ வெங்கடேஷ் பருத்திவீரன் படத்தில் பிரியாமணியின் முறைமாமனாக நடித்திருப்பார். ஹீரோயின் நேகா.