பல வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்து ஹிட்டான படங்கள் தற்போது நவீன மாற்றங்களுடன் டிஜிட்டல் மயமாகப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கிறது ஊழலே செய்யாதவர் என்று விரல் விட்டு சொல்லக்கூடிய கூடியவர்களில் முதன்மையானவர் மறைந்த தமிழக முதலைமச்சரான கர்மவீரர் காமராஜர். அப்படிப்பட்டவரின் வாழ்கையை ரமணா ஆனால் சில வருடங்களுக்கு முன் வெளியான காமராஜ் படம் நவீனமயமாக்கப்பட்டு வெளிவர இருக்கிறது.
கம்யூனிகேசன்ஸ் “காமராஜ்” என்ற பெயரில் 2004ல் படமாக தயாரித்தது. அதை இப்போது டிஜிட்டல் மயமாக்கியதுடன் மேற்கொண்டு 15 புதிய காட்சிகளை படமாக்கி இணைத்திருக்கிறார்கள்.
காமராஜராக இப்படத்தில் நடித்த ரிச்சர்ட் மதுரம் இறந்து விட்டதால் அவரது மகன் பிரதீப் மதுரம் காமராஜராக நடித்திருக்கிறார் பெரியார் வேடத்தில் விஜயகுமார் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
“கர்மவீரர் காமராஜர் வாழ்கையை படமாக்கியத்தில் நான் பெருமை அடைகிறேன்” என்கிறார் படத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன். புதிதாக இணைக்கப்பட்டுள்ள பல காட்சிகள் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை தரும். அதில் காமராஜர் ரஷ்யாவுக்கு பயணம் செய்த காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.