பாலிவுட்டில் வசூலில் சாதனை படைத்த ‘தூம்’ பட வரிசையில் அடுத்து வரவிருக்கும் ‘தூம்-3’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ‘தூம்’ படத்தில் அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடிக்க, ‘தூம்-2’ல் ஹிருத்திக் ரோஷன் கதாநாயகனாக நடித்திருந்தார். ‘தூம்-3’யிலும் அபிஷேக் பச்சன் மற்றும் உதய் சோப்ரா ஹீரோவாகவும், வில்லன் ரோலில் ஆமீர்கானும் நடிக்கின்றனர்.
முதல் இரண்டு தூம் படங்களைவிட தூம்-3’யில் நிறைய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தூம், தூம்-2 படங்களை சஞ்சய் காத்வி என்பவர் இயக்கியிருந்தார். ஆனால் இம்முறை அவர் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக விஜய் கிருஷ்ண ஆச்சர்யா டைரக்ஷன் பொறுப்பை ஏற்றிருக்கிறார். முதல் இரண்டு பாகங்களை தயாரித்த ஆதித்யா சோப்ராவே, தமது யாஸ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் இப்படத்தையும் தயாரிக்கிறார்.
படத்தின் முக்கிய ரோலான வில்லன் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்திருக்கிறார். இதற்குமுந்தைய பாகங்களில் அந்த ரோலில் ஜான் ஆபிரஹாமும், ஹிருத்திக்கும் நடித்து இருந்தனர். ஆனால் வில்லன் கதபாத்திரம் என்று மட்டும் சொல்லிவிட முடியாதபடி ஆமீர்கான் நடிக்கும் ரோலைப் பற்றிய பல சஸ்பென்ஸ்கள் ரகசியமாக வைக்கப்படுள்ளன.
இந்தப்படத்தில் வெவ்வேறு காலகட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக ஆமீர்கானின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். படப்பிடிப்பில் இந்த கேரக்டரின் நிஜ சொரூபத்தையும் ஆமீர்கானின் நடிப்பையும் பார்த்து படக்குழுவினர் அசந்துவிட்டாலும், படம் வெளியாகும் வரை ரகசியம் காக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்களாம்.