தீபாவளிக்கு அஜீத் ரசிகர்களை குஷிப்படுத்த ‘ஆரம்பம்’ படம் வெளியாகிறது. அதனால் அவர்களுக்கு கொண்டாட்டத்திற்கும் உற்சாகத்திற்கும் அளவிருக்காது. ஆனால் விஜய் ரசிகர்கள் அவர் படம் ரிலீஸ் ஆகாததால் சோர்ந்து போவார்கள் இல்லையா?. இதனை உணர்ந்துதானோ என்னவோ விஜய் தற்போது தான் நடித்துவரும் ‘ஜில்லா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபாவளி தினத்தன்று வெளியிட முடிவு செய்திருக்கிறார்.
விஜய் ரசிகர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் உற்சாகத்தை தரும். ஆனால் இந்த தகவலை வெளியிட்டிருப்பது விஜய் அல்ல. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகனான ஜித்தன் ரமேஷ்தான். தயாரிப்பாளர் மகன் சொல்வதால் தாராளமாக நம்பலாம். தற்போது ஜப்பானில் உள்ள ஒசாகாவில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும் ‘ஜில்லா’ படக்குழு தீபாவளிக்கு முன் தினம் தான் சென்னை திரும்புகிறார்களாம்.