சமீபகாலமாக மலையாள படங்களை கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் நன்றாக புலப்படும். அதாவது பெரும்பாலான படங்களில் வில்லன்கள் என்பவர்கள் இருக்கிறார்களா என தேடவேண்டியிருக்கிறது. காரணம் வில்லன்களின் ஆதிக்கம் குறைந்துபோய் கதையின் சூழல்தான் வில்லனாக மாற்றம் பெற்றிருக்கிறது. இதற்கு உதாரணமாக சமீபத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான்நடிப்பில் வெளியான ‘நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி’, ‘நார்த் 24 காதம்’ ஆகிய படங்களில் வில்லன்களே இல்லை.
இரண்டு வாரங்களுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் வெளியான இம்மானுவேல் படத்தில் கூட, மாறிவரும் கார்ப்பரேட் சுழ்நிலைதான் சாதாரண மளிகைக்கடை வைத்து நடத்தும் மம்முட்டிக்கு வில்லனாக சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால் மாறிவரும் இந்த புதிய சினிமாவை மலையாள ரசிகர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயம்.