கடந்த சிலமாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் நடித்த லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன் படத்தில் ஐந்து ஹீரோயின்கள் நடித்திருந்தார்கள். சமீபத்தில் வெளியான அஞ்சு சுந்தரிகள் படத்தில் நாலு ஹீரோயின்கள் என படத்துக்குப் படம் ஒரு பக்கம் அதிக எண்ணிக்கையில் ஹீரோயின்களை மையப்படுத்தி படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இன்னொரு பக்கம் ஹீரோயினே இல்லாமல் படம் எடுக்கிறோம் என Third World Boys என்ற முழுப்படத்தையே எடுத்து அசத்தியிருக்கிறது இன்னொரு டீம். இந்தக்கதைக்கு கதாநாயகி தேவைப்படவில்லையாம். ஆனால் படத்தின் சப்போர்ட்டிங் கேரக்டர்களில் பெண்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால் கதாநாயகர்களாக மட்டும் ஏழு பேர் நடித்திருக்கிறார்கள்.
அதற்காக இது ஆக்ஷன் படமோ அல்லது த்ரில்லர் படமோ என நினைத்துவிட வேண்டாம். அக்மார்க் குடும்பப்படம் தானாம். இத்தனைக்கும் கதாசிரியர்களான அய்யப்ப ஸ்வரூப் மற்றும் சகலாதரன் சசிதர் என்ற இருவரும் சேர்ந்து இயக்கிருக்கும் முதல் படம்தான் இது.