அஜீத்தின் ‘ஆரம்பம்’ பட ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள பஞ்ச் வசனங்கள் அவர்களை குஷிப்படுத்தியுள்ளன. ட்ரெய்லரை பார்க்கும்போதே இந்த படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் ஒரு முழு அஜீத் படமாக புதிய கோணத்தில் வடிவமைத்திருக்கிறார் என்று தெரிகிறது.
இந்த ட்ரெய்லரை பார்த்துவிட்டு சிம்பு தனது மகிழ்ச்சியையும், அஜீத் ரசிகராக தனது ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். “நான் ஒரு நடிகனாக இருந்தாலும் கூட அஜீத்தின் ரசிகனாக விவரிக்க முடியாத ஒரு பரவசத்தில் இருக்கிறேன். ஆரம்பம் ட்ரெய்லர் கச்சிதமாக உள்ளது” என்று பாராட்டியுள்ளார் சிம்பு.