டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் உலகின் முதல் ஊசித்துளை கண்மணி சீரமைப்பு மையத்தை முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்!

13

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் உலகின் முதல் ஊசித்துளை கண்மணி சீரமைப்பு மையத்தை முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்!

 

• பேராசிரியர் டாக்டர் அமர் அகர்வால் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன சிகிச்சை முறையானது, இதுவரை 5000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குப் பார்வைத்திறனை அளித்துள்ளது.

• கருவிழித் தழும்புகள், சீரற்ற கருவிழிகள் மற்றும் சிக்கலான பார்வை குறைபாடுகள் உள்ள குறிப்பிட்ட நோயாளிகளுக்கு, திசுக்களைப் பாதுகாக்கும் மேம்பட்ட சிகிச்சை அளிக்கும் குறிக்கோளுடன், 41-வது தேசிய கண்தான இருவார நிகழ்வில் புதிய சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

 

*சென்னை, ஆகஸ்ட் 27, 2026:* *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்* , சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள புகழ்பெற்ற டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் உலகின் முதல் ‘பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி’ மையத்தை இன்று தொடங்கி வைத்தார். *டாக்டர் அமர் அகர்வால், டாக்டர் மனோஜ் கத்ரி* உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிக்கலான கருவிழிப் பாதிப்புகளுக்கு ஆளான நோயாளிகளுக்கு, திசுக்களைப் பாதுகாக்கும் அதிநவீன தீர்வுகளை வழங்கும் பயணத்தில் இது முக்கிய மைல்கல்லாகும்.

 

டாக்டர் அமர் அகர்வாலால் உருவாக்கப்பட்ட நுண்ணிய அறுவை சிகிச்சை நுட்பமான ‘பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி’ (PPP) சிகிச்சைக்கு இம்மையம் பிரத்தியேகமாகச் செயல்படும். கருவிழித் தழும்புகள், சீரற்ற கருவிழிகள், அதிகப்படியான கருவிழிப் பிறழ்வுகள், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சில பார்வைக் கோளாறுகள் கொண்ட குறிப்பிட்ட நோயாளிகளின் பார்வைத்திறனை மேம்படுத்துவதே இம்மையத்தின் இலக்காகும். இயற்கையான கருவிழியைப் பாதுகாத்து, சிக்கலான கருவிழிப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்குப் பயனுள்ள பார்வையை மீட்டெடுப்பது என்ற சவாலுக்கு இந்த அதிநவீன மையம் சிறந்த தீர்வாக அமையும்.

 

கருவிழியை மாற்றுவதற்குப் பதிலாக, கண் பாவையில் துல்லியமாக மையப்படுத்தப்பட்ட ஒரு சிறிய துளையை உருவாக்குவதன் மூலம் கண்ணின் ஒளியியல் அமைப்பை PPP மாற்றியமைக்கிறது. இச்சிறிய துளையானது சிறந்த முறையில் குவியப்படுத்தப்பட்ட மையக் கதிர்களை விழித்திரையை அடையச் செய்கிறது. இந்த ‘பின்ஹோல்’ விளைவு அதிகப்படியான ஒளியியல் பிறழ்வுகளின் தாக்கத்தைக் குறைத்து, பார்வையின் தரத்தை மிகவும் மேம்படுத்துகிறது.

 

இச்சிகிச்சை முறைக்குத் தானமாகப் பெறப்படும் கருவிழித் திசுக்கள் தேவையில்லை; இதனால் உலகளவில் காணப்படுகின்ற கருவிழிக் கொடையாளர்களின் பற்றாக்குறையைக் கருத்தில் கொள்ளும்போது இது மிகவும் பொருத்தமான மாற்றுத்தீர்வாக அமைகிறது. கருவிழி மாற்று அறுவைசிகிச்சை மற்றும் கண் வங்கிகள் குறித்த முக்கியச் சர்வதேச ஆய்வின்படி, உலகளவில் சுமார் 1.27 கோடி மக்கள் கருவிழி மாற்று சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனர். ஆனால், தேவைப்படும் ஒவ்வொரு 70 நபர்களுக்கும் ஒரேவொரு கருவிழி மட்டுமே கிடைக்கிறது. உலகெங்கிலும் 116 நாடுகளில் ஆண்டுக்கு சுமார் 1,85,000 கருவிழி மாற்று அறுவைசிகிச்சைகள் மட்டுமே செய்யப்படுவதை அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

 

*டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் அமர் அகர்வால்* பேசுகையில்: “PPP மையத்தைத் தொடங்கி வைத்த மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பிரத்தியேகமான பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி மையத்தின் திறப்பு விழாவானது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். ஏனெனில், இந்த புதுமையான முறையை பரவலாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதை இது எளிதாக்கும். விரிவான கருவிழிப் பரிசோதனை, ஒளியியல் மதிப்பீடு முதல் அறுவை சிகிச்சை மற்றும் நீண்டகால முடிவுகளைக் கண்காணிப்பது வரை, கட்டமைக்கப்பட்ட வழிமுறையை உருவாக்க இந்த மையம் உதவுகிறது. இச்சிகிச்சைக்குப் பொருத்தமான நோயாளிகளை எவ்வாறு கண்டறிவது என்பதை கண் மருத்துவர்களுக்கு கற்பிப்பதற்கான தளமாகவும் மையம் சேவையாற்றும்.” என்று கூறினார்.

 

*விட்ரியோ-ரெட்டினல் சேவைகள் பிரிவின் இயக்குநர் டாக்டர் மனோஜ் கத்ரி* கூறுகையில், “ஒரு கண்டுபிடிப்பானது வெறும் அறிவியல் சிந்தனையாக மட்டுமில்லாமல், நோயாளியின் அன்றாட வாழ்க்கையை மேம்பட மாற்றும் தீர்வாக மாறும்போதுதான் அது பயனளிப்பதாக உண்மையான அர்த்தத்தைப் பெறுகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இத்திறப்பு விழாவில் கலந்துகொண்டது, இக்குறிக்கோளை மேலும் முன்னெடுத்துச் செல்ல உதவும். இந்தச் சிறப்பான கண்டுபிடிப்பு, உலகளவில் மில்லியன் கணக்கான நோயாளிகளுக்கு பார்வையை மீட்டுத்தருவதில் பெரும் பங்காற்றும் என உறுதியாக நம்புகிறோம்” என்றார்.

 

கண் மருத்துவர்கள் மத்தியில் இந்தத் தொழில்நுட்பம் குறித்த அறிவை விரிவுபடுத்துவதிலும் மருத்துவமனை தொடர்ந்து பணியாற்றி வருகிறது; ஒவ்வொரு ஆண்டும் 50-க்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள் பயிற்சிப் பயிலரங்குகள் மற்றும் கல்வித் திட்டங்கள் மூலம் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள இந்தப் பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி மையம் வெறும் அறுவை சிகிச்சைக்கான அமைவிடமாக மட்டுமல்லாமல், மேம்பட்ட நோயறிதல், நோயாளிகளைத் தேர்வு செய்தல், அறுவை சிகிச்சை, சிகிச்சைக்குப் பிந்தைய மதிப்பீடு, நீண்டகாலக் கண்காணிப்பு, ஆராய்ச்சி மற்றும் கண் மருத்துவப் பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான திட்டமாகவும் செயல்படும்.

 

தமிழ்நாட்டில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சமீபத்தில் செயல்படுத்திய சமுதாய நலனுக்கான கண்-சுகாதார முயற்சிகளின் தொடர்ச்சியாகவும் இந்த மையத்தின் திறப்பு விழா சிறப்பாக அமைந்துள்ளது. முன்னதாக, மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்காக ஒரு நாள் இலவசக் கண் பரிசோதனை முகாமினை மருத்துவமனை மிகப் பெரிய அளவில் நடத்தியது. ஒரே நாளில் 16,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இது குழந்தைகளிடையே கண் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் முக்கியத்துவம் மீதான அகர்வால்ஸ் குழுமத்தின் அர்ப்பணிப்பை உணர்த்துகிறது.

எனவே, ஆழ்வார்பேட்டை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ‘பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி’ மையமானது, ஒரு சிறப்பு மருத்துவ மையத்தின் தொடக்கத்தை விட மிகவும் மேலானதாகும். மேம்பட்ட ஒளியியல், நுண்ணிய அறுவை சிகிச்சை, திசுப் பாதுகாப்பு மற்றும் நோயாளிகளைத் துல்லியமாகத் தேர்வு செய்யும் முறை ஆகியவை ஒன்றிணைந்து, பலருக்குப் பார்வையளிக்க உதவும் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய ஒரு நடவடிக்கையாக இது அமைகிறது.

——————————————————————————————————————————————————-

*மேலும் விவரங்கள் மற்றும் ஊடகத் தொடர்புகளுக்கு:* மகேஷ் குமார் @ 98845 45000

Comments are closed.