அண்ணனுக்கு எட்டாது.., தம்பிக்கு எட்டும் என்ற பழமொழியை படித்திருப்பீர்கள். ஆனால் சூர்யா விஷயத்தில் அது பொய்யாய் போய்விட்டது. இயக்குனர் லிங்குசாமியின் டைரக்ஷனில் நடித்துவிட வேண்டும் என்பது இன்றைய இளம் முன்னணி நடிகர்களுக்கு ஆசையாகத்தான் இருக்கிறது. காரணம் கமர்ஷியல் அம்சங்களை கச்சிதமாக கலந்து அவர் தரும் ஆக்ஷன் பேக்கேஜ் அப்படி.
அந்தவகையில் லிங்குசாமியின் டைரக்ஷனில் கார்த்தி நடித்த பையா படம் சூப்பர்ஹிட்டாக அமைந்தது. லிங்குசாமியின் டைரக்ஷனில் தம்பி நடித்துவிட்டார். அண்ணன் எப்போது நடிக்கப்போகிறார் என்ற கேள்வி அப்போதே எழுந்தது. இப்போதுதான் அதற்கான நேரம் கனிந்திருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னரே லிங்குசாமியின் படத்தில் சூர்யா நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. தற்போது இந்தப்படத்திற்கு ரவுடி என பெயர் வைத்துள்ளதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் உலாவருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தில் இருந்து ரவுடி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அரும் செய்தியில் உண்மையில்லை என மறுத்துள்ளனர்.