ரஜினியாக மாறிய கார்த்தி – எடுத்தார் ‘காளி’ அவதாரம்

113

பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜாவை முடித்துவிட்ட கார்த்தியின் அடுத்த அனல் பறக்கும் ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது. இப்போது ‘காளி’ யாக அவதாரம் எடுத்திருக்கிறார் கார்த்தி. படத்தின் பெயரே ‘காளி’ தான். 1980ல் ரஜினி நடித்த சூப்பர்ஹிட் படம்தான் காளி. தனது முதல் படத்தின் மூலம்முத்திரை பதித்த ‘அட்டகத்தி’ ரஞ்சித் இந்தப்படத்தை இயக்குகிறார்.

“அட்டகத்தி” படத்தின் மூலம் சென்னை புறநகர் மக்களின் புகைபடிந்த வாழ்க்கையை, இளைஞர்களின் காதலை வெளிச்சம் போட்டுக் காட்டிய ரஞ்சித், ‘காளி’ படத்தின் மூலம் வடசென்னை மக்களின் வாழ்க்கையை திரையில் காட்ட இருக்கிறார். இந்தப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார். சிலமாதங்களுக்கு முன் தெலுங்கில் வெளியான ‘இத்தரம்மாயிலதோ’ படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தவர் தான் இந்த கேத்தரின் தெரசா.

காளி யார் என ரஞ்சித்திடம் கேட்டால், “ஒரு வடசென்னை வாலிபன் தான் காளி. அவன் படித்த இளைஞன், பாசக்கார கலைஞன், பல கலைகளின் ரசிகன். அவனும், அவன் குடும்பமும், அவன் சார்ந்த மக்களும், அவர்களின் கொண்டாட்டமும் குதூகலமும் தான் ‘காளி’. பெரம்பூரில் தொடங்கும் இப்படம் வடசென்னையின் அடையாளமாக இருக்கும்” என்கிறார்.

அட்டகத்தி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான், இந்தப்படத்திற்கும் இசையமைக்கிறார். ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தை வெளியிட்ட ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு அக்டோபர்-4ல் தொடங்கி வடசென்னையை வலம்வர இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.