விருது வாங்கவும் வியாபார ரீதியாகவும் படம் எடுப்பவர்கள் மத்தியில் சாதனைக்காக ஒரு படத்தை இயக்கியுள்ளார் புதுமுக இயக்குனர் ராஜா அருணாச்சலம். படத்தின் பெயர் ‘அடியேன்’. சொந்தம் மற்றும் சொத்து விட்டுப்போகக் கூடாது என்பதற்காக வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டால், குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை வித்தியாசமான கோணத்தில் உணர்வு பூர்வமாகவும் சொல்லி இருக்கிறாராம்.
இந்த படத்தில் புதுமுகம் சத்யா கதாநாயகனாகவும் ப்ரதிக்ஷா மைதிலி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் இருவரை மட்டுமே வைத்து நான்கு பாடல்களையும் ஒரே அறைக்குள் படமாக்கி சாதனை படைத்துள்ளார் இயக்குனர் ராஜா அருணாச்சலம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.