‘ஒத்தக்கடை ஒத்தக்கடை மச்சான்’ – காதல் தோல்வியில் புலம்பும் விஷால்

88

சுசீந்திரன் டைரக்‌ஷனில் பாண்டியநாடு படத்தில் நடித்து வருகிறார் விஷால். சமீபத்தில் இந்தப்படத்திற்காக விஷால், விக்ராந்த், சூரி மூன்று பேரும் ஆடிப்பாடிய ‘ஒத்தக்கடை ஒத்தக்கடை மச்சான்’ என்ற சோகமான சந்தோசப் பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. அதென்ன சோகத்துல சந்தோசம் என்று கேட்கிறீர்களா? விஷயம் இருக்கிறது.

காதல் ஏற்றுக்கொள்ளப்படாமல் வருத்தத்தில் இருக்கும் விஷாலுக்கு விக்ராந்த்தும் சூரியும் காதலே வேண்டாம் என்று அறிவுரை சொல்லிப் பாடுவது போலவும் அதேபாடலின் பாதியில் விஷாலுக்கு, லட்சுமிமேனன் செல்போனில் தன் காதலைச் சொல்ல, உடனே விஷால் ஜாலி மூடிற்கு மாறி சந்தோஷமாக ஆடுவது போலவும் இந்தப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்தப்பாடலில் காதல் தோல்வி மற்றும் காதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட சந்தோசம் என இருவேறு உணர்ச்சிகளை பிரதிபலித்திருக்கும் விஷால் “உண்மையிலே இந்தப்பாடல் சவாலாக இருந்தது” என்கிறார். இந்தப்பாடலுக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.