டைரக்ஷன் வேலையில் மும்முரமாக இருக்கிறார் பிரகாஷ்ராஜ். தமிழில் ‘உன் சமையல் அறையில்’, தெலுங்கில் ‘உலவச்சாறு பிரியாணி’, கன்னடத்தில் ‘ஒகரானே’ என ஒரே படத்தை மூன்று மொழிகளில் இயக்குவது என்றால் சும்மாவா.? மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘சால்ட் அண்ட் பெப்பர்’ படத்தைத்தான் ரீமேக் செய்கிறார்.
கதை.. நாற்பது வயதை தொடுகின்ற திருமணம் ஆகாத ஆண், செல்போன் மூலமாக, திருமணம் எனறாலே வெறுக்கும் ஒரு முதிர்கன்னியை பார்க்காமலே காதலிக்கிறான். அவனுக்கு ஒரு இளம் வயது தோழன், அவளுக்கு ஒரு இளம் வயது தோழி.
காதலர்கள் இருவரும் எங்கே நேரில் சந்தித்தால் தான் அழகாக இல்லாததை காரணம்காட்டி மறுத்துவிடுவாரோ என ஒரே மாதிரியாக நினைத்து நேரில் சந்திக்க தயங்குகிறார்கள். அதனால் தங்களுக்குப் பதிலாக தங்களது இளம் வயது நண்பர்களை, தனது காதலன்/காதலி எப்படி இருப்பார் என பார்த்துவர அனுப்புகிறார்கள்.
உளவு பார்க்க வந்த இடத்தில் இளசுகளுக்குள் காதல் பற்றிக்கொள்ள, இதை தவறாக புரிந்துகொண்ட பெரிசுகள் தங்கள் நண்பர்/ நண்பி தனது காதலரை பிரித்துக்கொண்டதாக நினைக்கிறார்கள். பல குழப்பங்களுக்கு பின்னர் காதலர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் சொல்லும் கதைதான் இது.
மலையாளத்தில் லால் நடித்த கேரக்டரில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ். மேலும் சினேகா, ஊர்வசி இவர்களுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இசைஞானி இளையரஜா இசையமைக்கிறார். இதன்படப்பிடிப்பை மைசூரில் மூன்று மாதங்கள் தொடர்சியாக நடத்த முடிவு செய்துள்ளார் பிரகாஷ்ராஜ்.