டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தியில் ‘ஆஜ் கி பிரீடம்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி விட்டது. இது தமிழில் ‘பிரீடம்’ என்ற பெயரில் வெளியாகிறது.
மாணவி ஜோதி வேடத்தில் தமிழ் பெண் ரே நடித்திருக்கிறார். மாணவியைப் பற்றி அமிதாப்பச்சன் எழுதி இருந்தார் ஒரு கவிதையை இந்தி இசையமைப்பாளர் அனிரூத் பதக் இசையில் பாடலாக்கி இருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார் டான் கெளதம். சம்பவம் நடந்த இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது பாதிக்கப்பட்ட ஜோதியின் பெயரையே கதாநாயகியின் கதாபாத்திரப் பெயராகவே வைத்திருக்கிறார் இயக்குனர்.
“ஒரு இந்திய பெண் உடல் முழுக்க நகைகளுடன் நள்ளிரவு சாலையில் தனியாக எப்போது நடந்து போக முடிகிறதோ அப்போதுதான் முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்” என்றார் மகாத்மா காந்திஜி. அந்த கருத்தை நினைவுகூறும் வகையில் இந்தபடத்தை அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியிட உள்ளதாக படத்தின் இயக்குனர் டான் கெளதம் தெரிவித்துள்ளார்.