பாக்ஸ் “ஆஃபீஸ் ரெக்கார்டில் எனக்கு அக்கறை இல்லை”- ஆமிர்கான்

84

இந்தி சினிமாவை பொறுத்தவரை ஒரு படம் ரிலீஸாகி, குறைந்தபட்ச லாபம் சம்பாதித்து தருவது சாதாரணமாக நடந்துவிடும். ஆனால் அங்கே இருக்கும் சூப்பர்ஸ்டார்களுக்கோ வேறுவிதமான பிரச்சனை. தாங்கள் நடிக்கும் படம் லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதற்குமுன் வசூல் ரெக்கார்டில் யார் முதலில் இருக்கிறார்களோ அதை தன்னுடைய படம் முறியடிக்கவேண்டும் என்பதுதான் அவர்களது ஆசை, லட்சியம் எல்லாமே.

சென்னை எக்ஸ்பிரஸ் படம் ரிலீஸாகும் வரை பாக்ஸ் ஆஃபீஸ் ரெக்கார்டில் முதல் இடத்தில் இருந்தது ஆமிர்கான் நடித்த த்ரீ இடியட்ஸ் படம்தான். ஆனால் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் வசூல் அந்த சாதனையை முறியடித்து விட்டு முதல் இடத்தை பிடித்துக்கொண்டுள்ளது. இப்போது ஆமீர் நடித்துள்ள தூம்-3 படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்தப்படம் ஷாருக்கானின் சாதனையை முறியடித்து மீண்டும் ஆமிர்கானை முதல் இடத்தில் அமரவைக்குமா என ஆமிரிடம் கேட்டால், “எனக்கு ரெக்கார்டை வைப்பது, அதை உடைப்பது இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என்னைப்பொறுத்தவரை நான் ஒரு நடிகன், மக்கள் எனக்கு உயர்வாக என்ன தருகிறார்களோ அதுதான் என்னைப்பொறுத்தவரை சாதனை. மக்களுக்கு பிடித்தமாதிரி படம் தரவேண்டும். குறிப்பாக அவர்கள் மனதை வெல்லவேண்டும். அதுதான் உண்மையான பாக்ஸ் ஆஃபீஸ் ரெக்கார்டு” என்கிறார் ஆமிர்கான்.

Leave A Reply

Your email address will not be published.