‘எப்ப மாமா ட்ரீட்டு’ பாடலை மீண்டும் சேர்க்க விஜய் ரசிகர்கள் வேண்டுகோள்

123

ஜில்லா படத்தின் நீளம் 3மணி 12 நிமிடங்கள்.. இது ரொம்பவே நீளமாக இருப்பதாக பல இடங்களில் இருந்து வந்த ரசிகர்களின் கருத்தால் படம் ரிலீஸான மறுநாளே பத்து நிமிடங்கள் குறைக்கப்பட்டது. ஆனால் இப்போது ரசிகர்களுக்கு வேறுவிதமான வருத்தம் ஏற்பட்டுள்ளது. காரணம் வெட்டப்பட்ட அந்த பத்து நிமிட காட்சிகளில் ‘எப்ப மாமா ட்ரீட்டு’ பாடலும் தூக்கப்பட்டு விட்டது தான்.

படத்தில் க்ளைமாக்ஸுக்கு முன் இடம்பெறும் இந்தப்பாடலில் விஜய்யின் டான்ஸ் மூவ்மெண்ட்கள் அற்புதமாக இருக்கும். அதனால் அந்தப்பாடலை மீண்டும் சேர்க்கும்படி தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரிக்கும் இயக்குனர் நேசனுக்கும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

இதுபற்றி இயக்குனர் நேசன் குறிப்பிடும்போது, “மீண்டும் அந்தப்பாடல் காட்சியை சேர்க்கவேண்டும் என்றால் சென்சாரின் அனுமதி வாங்கவேண்டும். ஆனாலும் அந்தப்பாடல் ‘ஜில்லா’வில் மீண்டும் இடம்பெற விரைவாக முயற்சி மேற்கொள்ளப்படும்” என்று கூறியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.