பத்து வருடங்களுக்கு முன் படமாக எடுத்தபோது அனைவரும் இயக்குனர் ஷங்கரை பாராட்டினார்கள். ஆனால் சிலரோ இதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் சாத்தியம் நடைமுறைக்கு ஒத்துவராது என்றும் கிண்டலடிக்கவும் தவறவில்லை. ‘முதல்வன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரு நாள் முதல்வர்’ கான்செப்ட்டைத்தான் சொல்கிறோம். இந்தியிலும் கூட ‘நாயக்’ என்ற பெயரில் இந்தப்படத்தை ரீமேக் செய்தார் ஷங்கர்.
ஆனால் அந்தப்படம் வெளியாகி பத்து வருடங்கள் கழிந்த நிலையில், இன்று ஆம் ஆத்மி மூலமாக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலில் போட்டியிட்டு டில்லியின் முதல்வராக பதவியேற்று இருப்பது கிட்டத்தட்ட ‘முதல்வன்’ படத்தின் பிரதிபலிப்புதான் என்கிறார்கள் பலரும். இப்படி ஒருநாள் நடக்கும் என அப்போதே கணித்த ஷங்கரின் இந்த தீர்க்க தரிசனம் பற்றி பத்திரிகைகள், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும் ஷங்கருக்கு பாராட்டுக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன.