பொங்கலுக்கு வெளியான ஜில்லாவும் வீரமும் தியேட்டர்களுக்கு மக்கள் கூட்டத்தை இழுத்து வந்துகொண்டு இருக்கின்றன. இது தமிழ்நாடு என்பதால் நாம் ஆச்சர்யம் கொள்ள தேவையில்லை. ஆனால் கேரளாவில் இது நடந்திருப்பதால் ஆச்சர்யப்பட்டுத்தான் ஆகவேண்டும்.
இந்த இரண்டு படங்களும் கேரளாவில் ரிலீஸ் ஆகப்போவதை உணர்ந்துதான் கடந்த வாரம் வேறு எந்த மலையாளப் படங்களும் வெளியாகவில்லை. விஜய், அஜித்திற்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் என்பதுடன் ஜில்லாவில் லாலேட்டன் நடித்திருப்பதால் அதை தங்களது படமாக நினைத்தும் வழிவிட்டு மலையாளப் படங்கள் ஒதுங்கியிருக்கின்றன என்றே சொல்லலாம்.