தயாரிப்பாளரானார் சுனைனாவின் மேனேஜர்

46

நடிகை சுனைனாவிடம் மேனேஜராக இருந்த டி.சுரேஷ்பாபு என்பவர் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். படத்தின் பெயர் ‘தோடா அட்றா சக்கை’. ஆர்யன் ராஜேஸ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மோனிகாசிங், இஷா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் கஞ்சா கருப்பு நடிக்கிறார்.

காமெடி த்ரில்லராக உருவாகிவரும் இந்தப்படத்தை ஸ்ரீகரபாபு என்பவர் இயக்குகிறார். ஜான் என்ற புதுமுகம் இசையமைக்கிறார். படத்தின் பெரும்பகுதி காட்சிகள் ஹைதராபாத், சென்னை, ஊட்டி போன்ற இடங்களில் படமாக்கப் பட்டுள்ளது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.