வித்தியாசமான தலைப்புகளை வைத்து அதன்மூலம் பரபரப்பை ஏற்படுத்தி படத்திற்கு பப்ளிசிட்டி தேடுவதுதான் தமிழ்சினிமாவில் இப்போதைய ட்ரெண்ட்டாக உள்ளது. அந்தவகையில் மயில் மாஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கும் படம் தான், ‘தமிழ்செல்வனும் கலைச்செல்வியும் 50கி.மீ’. இந்தப்படத்தை பி.பாண்டியன் இயக்குகிறார்.
‘ராணிப்பேட்டையில் இருக்கும் ஹீரோவுக்கும், காஞ்சிபுரத்தில் வசிக்கும் ஹீரோயினுக்கும் காதல் ஏற்படுகிறது. இவர்களுக்கு இடையேயுள்ள தூரம் 50 கி.மீ. இவர்கள் காதலுக்கு சிலரால் பிரச்னை ஏற்படுகிறது. அதை அவர்கள் எப்படி வெல்கிறார்கள் என்பதுதான் கிளைமாக்ஸ். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் புதுமுகங்கள் ராஜேஷ், கலை அனாமிகா, மகேந்திரன், யோகி ராம் உட்பட பலர் நடிக்கின்றனர்.