தமிழின தலைவர் பிரபாகரன் வரலாறு – திரைப்படமாக எடுக்கிறார் வ.கௌதமன்

44

அரசல் புரசலாக வெளிவந்துகொண்டிருந்த செய்திகளை இப்போது உண்மையாக்க களம் இறங்கிவிட்டார் இயக்குனர் வ.கௌதமன். தமிழின வீரர் மேதகு பிரபாகரனின் வரலாறை, ஈழத்தமிழர்களின் போராட்டத்தை படமாக எடுக்கிறார் கௌதமன்.

பிரேவ் ஹார்ட், உமர் முக்தார் போன்ற ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எல்லோரையும் ஈர்க்கும் படைப்பாக இது இருக்குமாம். பிரபாகரன் கதாபாத்திரத்தில் ஒரு தமிழன்தான் நடிக்கவிருக்கிறார் என்கிறார் கௌதமன். இதற்கான நடிகர்கள் தேர்வு விரைவில் ஆரம்பிக்கவிருக்கிறதாம்.

கௌதமன் இயக்கிய சந்தனக்காடு தொலைக்காட்சி தொடரை பார்த்துவிட்டு அவரைப் பாராட்டிய தமிழினத் தலைவர் பிரபாகரன் அப்போதே ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்தை திரைப்படமாக எடுக்கும்படி கௌதமனிடம் சொல்லவேண்டும் என நினைத்திருந்தாராம்.

அதற்குள்ளாக நான்காம் கட்ட போர் கடுமையானதால் அப்போது தள்ளிப்போன அந்த விஷயத்தை இப்போது படமாக எடுப்பத்ற்கு சரியான நேரம் வந்திருக்கிறது என்கிறார் கௌதமன். தமிழ் இனத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் பெருமைப்படும் விதமாகவும் அதேசமயம் துரோகம் செய்தவர்கள் வெட்கி, தலைகுனியும்படியாகவும் இந்தப்படம் இருக்கும் என்கிறார் இயக்குனர் வ.கௌதமன்.

Leave A Reply

Your email address will not be published.