“முதல்ல நீங்க கிளம்புங்க” சீமானை விரட்டிய சேரன்

51

’வெண்நிலா வீடு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சீமான், சேரன், தமிழச்சி தங்கபாண்டியன், தாணு உட்பட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
சீமானுக்கு முன்பு சேரனை பேச அழைத்தனர். ஆனால் சேரன், “இன்னும் இரண்டு நாளில் திருமணத்தை வைத்துக் கொண்டு இந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் அண்ணன் சீமானுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கும். அதை பற்றி கலந்து பேச அண்ணியார் அங்கே காத்துக் கொண்டிருப்பார்கள். அதனால் நீங்க முதல்ல பேசிட்டு கிளம்புங்கண்ணே.” என்று சீமானை பார்த்து துரிதப் படுத்த சிரித்துக் கொண்டே சீமான் பேசிவிட்டு கிளம்பினார்.

Leave A Reply

Your email address will not be published.