காவிரி மேலாண்மை வரையும் அமைக்க வலியுறுத்தி, திரையுலகினர் நேற்று மவுன போராட்டம் நடத்தினார்கள். இதில் ரஜினி, கமல், விஜய், விஷால் என முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஒரு சில முக்கிய நடிகர்கள், நடிகைகள் இதில் கலந்துகொள்ளவில்லை.. அதில் நடிகர் சூரியும் ஒருவர். ஆனால் அவர் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாத காரணம் குறித்து ஒரு நெகிழ்வான விளக்கத்தை அளித்துள்ளார்.
“எனது பெரியம்மாவின் திடீர் மரணத்தால், காவிரிக்காக நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும், பச்சைத் தண்ணீர் கூடப் பருகாமல் நானும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன். பெரியம்மாவுக்கு நிகரானவர்கள்தானே சோறாக்கிப் போட்ட அத்தனை அம்மாக்களும்” என அதில் குறிப்பிட்டுள்ளார் சூரி.

Comments are closed.