கடந்த மார்ச்-1ஆம் தேதி முதல் கியூப், யூ.எஃப்.ஓ என டிஜிட்டல் சினிமா சர்வீஸ் புரொவைடர்கள் வசூலிக்கும் வி.பி.எஃப் கட்டணத்தைக் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆரம்பித்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டம் தற்போது நாற்பதாவது நாளை எட்டியுள்ளது.
கியூப் நிறுவனம் 18-23% வரை வி,பி.எஃப் கட்டணத்தை குறைப்பதாக இறங்கிவந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில் மற்றொரு டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர் நிறுவனமான ஏரோக்ஸ் டிஜிட்டல் சினிமாஸ் (Aerox digital Cinemas) நிறுவனம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தில் 50% க்கும் குறைந்தளவில் வி.பி.எஃப் ஆக வசூலித்துக்கொள்ள தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நாற்பது நாட்களில் இந்த நிகழ்வு முக்கியமான திருப்பமாகவும் தயாரிப்பாளர் சங்கத்தின் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகவும் கருதப்படுகிறது.

Comments are closed.