‘அ..ஆ படத்தில் எஸ்.ஜே.சூர்யா சொல்லும் புகழ்பெற்ற வசனம் “இருக்கு.. ஆனா இல்ல..” தற்போது இந்த வசனத்தையே கொஞ்சம் மாற்றி டைட்டிலாக வைத்து ‘இல்ல.. ஆனா இருக்கு..’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா, கோ என வெற்றிப்படங்களை தயாரித்த எல்ரெட் குமார் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.
கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக இருந்த டீகே என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். கோ படம் தயாரிப்பில் இருந்தபோதே அதில் பணியாற்றிய டீகே, இந்தப்படத்தின் கதையை எல்ரெட் குமாரிடம் சொல்லி ஓகே வாங்கி வைத்திருந்தாராம். இந்தப்படத்தில் 15 புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.
இந்தப்படத்தில் ஹீரோவாக கிருஷ்ணா நடிக்க கதாநாயகிகளாக ரூபா மஞ்சரி மற்றும் ஓவியா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர ‘சூதுகவ்வும்’ படம் மூலம் தங்களது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களின் மனதை கவ்விய கருணாவும் ஹம்சாவும் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள இந்தப்படத்தின் 20 நாள் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இனி அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடாலுக்கு செல்ல இருக்கிறார்களாம்.
The massage at 울진출장안마 was so relaxing and soothing. A must-try!
295954 991193There is noticeably big dollars to understand about this. I suppose you created particular good points in features also. 637279
660040 353381I dont agree with this certain article. Even so, I did researched in Google and Ive located out which you are correct and I had been thinking within the incorrect way. Continue producing quality material comparable to this. 212413