‘நான் சிகப்பு மனிதன்’ – யுடிவி-யுடன் கை கோர்க்கிறார் விஷால்

275

‘பாண்டியநாடு’ படத்தில் ஜோடியாக நடித்த விஷாலும் லட்சுமி மேனனும் அடுத்த படத்திலும் ஜோடி சேர்கிறார்கள் என்று நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள ‘பாண்டியநாடு’ படத்தை பார்த்த பலரும் குறிப்பாக வினியோகஸ்தர்கள் விஷால், லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் கலர்ஃபுல்லாகவும் அதேசமயம் உயிரோட்டமாகவும் இருக்கின்றன என பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். அதனால் அடுத்த படத்திலும் இவர்கள் ஜோடி சேர்வது உறுதியாகிவிட்டது.

படத்திற்கு ‘நான் சிகப்பு மனிதன்’ என ஏற்கனவே ரஜினி நடித்த சூப்பர்ஹிட் படத்தின் டைட்டிலை வைத்திருக்கிறார்கள். இந்தக்கதைக்கு இந்த டைட்டில்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் இதனை முறைப்படி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு வாங்கி பயன்படுத்தி இருக்கிறார்கள். ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’, ‘சமர்’ என விஷாலை வைத்து இரண்டு படங்களை இயக்கிய விஷாலின் ஆஸ்தான இயக்குனரான ‘திரு’ தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார்.

மதன் கார்க்கி பாடல்களை எழுத, தமன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். யுடிவி நிறுவனத்துடன் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார் விஷால். நவம்பர் 4-வது வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து, 2014 சம்மர் சீசனில் வெளியிடத்திட்டமிட்டு இருக்கிறார்கள்.

2 Comments
  1. 남해출장안마 says

    A fantastic experience at 남해출장안마. The staff were professional and the atmosphere was calming.

  2. veneer says

    311135 338320The when I just read a weblog, Im hoping that this doesnt disappoint me approximately this one. Get real, Yes, it was my method to read, but When i thought youd have something intriguing to state. All I hear can be a number of whining about something that you could fix should you werent too busy trying to locate attention. 386721

Leave A Reply

Your email address will not be published.