மினிமம் கியாரண்டி இயக்குனர் என பெயர் வாங்கியவர் டைரக்டர் கண்ணன். ‘ஜெயம்கொண்டான்’ படத்தை மட்டும் தனது சொந்த கற்பனையில் இயக்கிய இவர், அடுத்து ‘கண்டேன் காதலை’, ‘சேட்டை’ என ரீமேக் ரூட்டுக்கு தாவிவிட்டார். கடைசியாக இவரது டைரக்ஷனில் வெளியான ‘சேட்டை’ சரியாக போகாவிட்டாலும் கூட இவரை தேடி அடுத்த பட வாய்ப்பு தற்போது வந்துள்ளது.
‘பட்டத்து யானை’ படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் அடுத்ததாக தயாரிக்க இருக்கும் படத்தை இயக்குகிறார் கண்ணன். விமல் தான் இந்தப்படத்தின் கதாநாயகன். அவருக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி ஒருவரை தேடி வருகிறார்கள். வரும் பிப்ரவரியில் படப்பிடிப்பை துவங்கி ஜூன் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.