நாளை தீபாவளி தினத்தன்று விஷாலின் ‘பாண்டியநாடு’ படம் வெற்றிகரமாக வெளியாகிறது. அதிலும் விஷாலின் முதல் சொந்த தயாரிப்பு வேறு. அதனால் சந்தோஷத்தில் இருக்கும் விஷால் நாளை ‘ஜீ’ தமிழ் சேனல் மூலம் ரசிகர்களுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார். ‘பாண்டியநாட்டு சண்டக்கோழி’ என்ற பெயரில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு விஷயத்திலும் தனது முதல் அனுபவங்களை ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக கலந்துரையாடுகிறார்.
தனது முதல் படம், முதல் இயக்குனர், முதல் ஹீரோயின், முதல் காதல், முதல் முத்தம், தான் இதுவரை நடித்ததில் தனக்கு பிடித்த கதாபாத்திரங்கள், தான் படத்தயாரிப்பில் இறங்க காரணம் என அனைத்தையும் ரசிகர்களிடம் மனம் திறந்து பேசுகிறார். நாளை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் விஷாலுடன் பாண்டியநாடு படத்தின் இயக்குனர் சுசீந்திரனும் நடிகர் விக்ராந்த்தும் கலந்துகொள்கிறார்கள்.