ஹேப்பி பர்த்டே ட்டூ ஸ்ரேயா!

45

31 வயசு ஆன மாதிரியா தெரிகிறது ஸ்ரேயாவை பார்த்தால்? தெலுங்கில் இருந்து தமிழ்சினிமாவுக்கு வந்த உத்தரகாண்ட் சுந்தரி. படித்ததெல்லாம் டெல்லியில். உனக்கு 20 எனக்கு பதினெட்டு படம் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களை உரசிய ஸ்ரேயா, தமிழில் தனது நான்காவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தார்.

தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம்வந்த ஸ்ரேயா மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பிற மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் இரண்டு, ஹிந்தியில் ஒன்று என மூன்று படங்களில் நடித்துவருகிறார் ஸ்ரேயா. இன்று பிறந்தநாள் காணும் ஸ்ரேயாவுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.