கர்ணன், பாசமலர், வசந்தமாளிகை படங்களைப்போலவே கே.பாலச்சந்தர் இயக்கத்தில் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டு விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஜெயப்பிரதா முதலானோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வருகிற 13-ஆம் தேதி சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெறவிருக்கிறது. இந்தப்படத்தில் நடித்த ஹீரோவே இந்த விழாவில் கலந்துகொண்டு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று எல்லோரும் கேட்டுக்கொண்ட்தற்கு இணங்க, ட்ரெய்லரை வெளியிடுகிறார் கமல். இந்த விழாவில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் பல திரையுலக பிரமுகர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.